சேக்-உசைன் முகமது கமால் என்னும் எசு. எம். கமால் 1928 அக்டோபர் 15 – 2007 மே 31 வரலாற்று ஆய்வாளர். நூலாசிரியர், பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர்.பல வரலாற்றுக் கருத்தரங்குகளில் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, நாணவியல் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியில் நடைபெற்ற விடுதலைப் போர்களை ஆவணப்படுத்தியவர். வரலாறுப் பேரவைகள் பலவற்றில் உறுப்ப்பினராக இருந்தவர். தான் ஆற்றிய வரலாற்றுப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
முகமது கமால் இராமநாதபுரம் நகரில் வாழ்ந்த சேக் உசைன் – காதர் அம்மாள் என்னும் இணையருக்கு மகனாக 1928 அக்டோபர் 15 ஆம் நாள் பிறந்தார்.
வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று கலை இளவர் பட்டம் பெற்றார்.
தமிழ்நாட்டு அரசின் வருவாய்த் துறையில் நாற்பதாண்டுகள் பணியாற்றினார். எழுத்தராகப் பணியில் இணைந்து வட்டாட்சியர் நிலைவரை உயர்ந்து ஓய்வு பெற்றார்.கமால், நூர்சகான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சர்மிளா என்னும் மகளும் இரு மகன்களும் உள்ளனர்.
கமால், தமிழ் அருவி என்னும் இசுலாமிய இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இவ்விதழ் இருதிங்களுக்கு ஒரு முறை வெளிவந்தது. இதன் முதல் இதழ் நவம்பர் 94 ஆம் ஆண்டில் வெளிவந்தது.வரலாற்று ஆய்வாளரான கமால் பின்வரும் அமைப்புகளில் வானாள் உறுப்பினராக இருந்தார்.
கமால் வரலாற்று இலக்கியப் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் பின்வரும் விருதுகளை வழங்கி உள்ளன.
கிளாக்கோமா என்ற கண் நீரழுத்த நோயால் கமால் 2002 ஆம் ஆண்டில் தன்னிரு கண்களின் பார்வையையும் இழந்தார். அதன் பின்னரும் உதவியாளர்களின் உதவியோடு ஆறு நூல்களை எழுதினார். 2007 மே 31ஆம் நாள் இராமநாதபுரத்தில் காலமானார்.


