குஜராத்தில் துவங்கிய வேள்வியின் தாக்கம் தூத்துக்குடி கடற்கரையிலும் பிரதிபலித்தது. தூத்துக்குடியின் 19 கிராமங்களைச் சேர்ந்த அளத்துப் பண்ணையார் என்கிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உப்பு உற்பத்தி செய்வதிலும், உப்பு அள்ளுவதிலும், உப்பளங்களில் காவலர்களாகவும். ஏவலர்களாகவும் பணிசெய்து வந்தனர். காந்தியின் அறை
கூவலும். இவ்வட்டாரத் தலைவர்கள் பலரது வழிகாட்டலும் அளத்துப்பண்ணையார் சமூகத்தின் பெரும்பான்மையோரை உப்பு அறப்போரில் ஈடுபடத்தூண்டியது. தங்களின் வாழ்வாதாரத்தை வதைக்க நினைத்த அன்னிய ஆட்சியாளரை எதிர்த்துப் போரிடவும், திருச்செந்தூர். ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம், குரும்பூர் போன்ற பல்வேறு இடங்களைச் சேர்ந்த தலைவர்கள் இங்கு வரும்போது அவர்களை வரவேற்று உணவளித்து தங்கவைத்துப் பொருளுதவி புரிந்தும் தமது ஈடில்லா தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். காந்தியத்தின் காந்தத்தால் கவரப்பட்ட பலரும் கதராடை அணிவதைத் தம் குறிக்கோளாக்கினர். தற்போதும் இக்குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்களும், விடுதலைப்போரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்களும் கதராடையில் மிளிர்வதைக் காணமுடிகிறது. காந்தி பேசிச் சென்ற இடத்திலிருக்கும் விநாயகர். காந்தி விநாயகர் எனப்பக்கிள்புரம் சந்திப்பில் பெயர் சூட்டப்பட்டுள்ளார். காந்தியை மாதிரி மொட்டையடித்து உடை உடுத்தி அலங்கரித்து அதைப் புகைப்படமாக்கி மகிழ்ந்த (காந்தியசுடலை) இளைஞர் இப்பகுதியில் சிற்றுண்டிக்கடை நடத்தி வருகிறார். 1941ம் ஆண்டில் நடைபெற்ற (9.11.1941 – ஈனமுத்து – மாடத்தி அம்மாள்: – பிரமு அம்மாள்) ஒரு திருமண வைபவப் பத்திரிக்கையில் இச்சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களின் மணமக்கள் காந்தியின் படம் போட்ட அதற்கு கீழே வந்தே மாதரம் என்ற சுலோகத்துடன் திருமணப் பத்திரிக்கையைத் தயாரித்து விநியோகித்துள்ளது
தெரிய வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற விடுதலைப்
போராட்டக் கிளர்ச்சிகளில் பல்வேறு சமூகங்களின். இனக்குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டதை யாவரும் அறிவர். ஆனால் மக்களின், ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவின் பெரும்பான்மையோர் இப்படி இப்புண்ணியத்திருப்போரில் பங்கேற்றது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படவேண்டும். குலசேகரப்பட்டினம் உப்பள அதிகாரி லோன் துரையைக் குறிவைத்துக் கொன்ற விடுதலை இயக்கத் தொண்டர்களின் வீரமும் தீரமும் இந்தப் பகுதியில் விடுதலை முழக்கம் வேகமாய் பரவ ஒரு காரணமாகவும் அமைந்திருக்கிறது. செந்தில் பண்ணையார் (இவர்தான் திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் மூவர்ணக் கொடி கட்டியவர்) பொன்னையா பண்ணையார். மாரிமுத்துப் பண்ணையார். அண்ணாவிப் பண்ணையார், சுப்பையா பண்ணையார். நடராஜ் பண்ணையார், சுப்பம்மாள், செல்வநாயகம் மற்றும் ஏராளமான தேசத் தொண்டாற்றிய தியாகிககள் அறப்போரில் இறங்கியதற்காக பெல்லாரி (கர்நாடகா). அலிப்புரம் (மேற்குவங்கம்), சென்னை போன்ற பல இடங்களில் சிறைவாசமும், சித்ரவதைகளும் அனுபவித்துள்ளனர் என்பது இப்பகுதி மக்களைச் சந்தித்த நேரடிக் களப்பணியின் போது நமக்குத் தெரியவருகிறது.
கதரும், உப்பும் தூய்மையின் சின்னம், எளிமையின் அடையாளம், சக்தியும், மூச்சும், புத்துணர்வும் அளிக்கும் சாதனங்கள். மனிதநெறிகளைப் போற்றி வளர்க்கும்
மகத்துவமான அன்பின் வெளிப்பாடுகள். ஆன்மசுத்தி பெறச் செய்யும் அற்புத வழிகாட்டலாகும். அதனால்தான் தேச பக்தியும் தெய்வபக்தியும் இணையப் பெற்ற வகையில் இப்பகுதியின் மக்கள் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர்.
விடுதலைப்போரில் திருவைகுண்டம் பஞ்சாயத்து
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உள்ளூராட்சி முறை நிர்வாகம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட போது. முதன்முதலாய் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் திருவைகுண்டம் பஞ்சாயத்தும் ஒன்று. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய 1885ஆம் ஆண்டுதான் திருவைகுண்டம் பஞ்சாயத்தும் தோன்றியது.
1927ல் மகாத்மாகாந்தி திருவைகுண்டத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவரை வரவேற்று வாழ்த்துமடல் வாசித்து பணமுடிப்பும் கொடுத்து மகிழ்ந்துள்ளது திருவைகுண்டம் பஞ்சாயத்து. 1931ல் பண்டித ஜவகர்லால் நேரு இங்கு வந்த போதும், 1934ல் மீண்டும் மகாத்மா காந்தி இம்மண்ணில் காலடி எடுத்து வைத்த போதும் 1935ல் தீரர் சத்யமூர்த்தி இங்கு வந்தபோதும் இதமான வரவேற்பளித்து, தமது தேசப்பற்றை வெளிப்படுத்தியது நமக்குத் தெரிய வருகிறது. ஆஷ்துரை மறைவிற்கு இரங்கல் தீர்மானம் (21.06.1911) போட்ட திருவைகுண்டம் பஞ்சாயத்து கமலா நேருவின் மறைவின் (29.02.1936) போதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மூலம் அதன் சுதந்திர வேட்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பிரிட்டீஷ் அரசின் யூனியன் ஜாக் கொடிகள்தான் அரசு. அலுவலகங்களிலும், பஞ்சாயத்து மற்றும் நகரசபை அலுவலகங்களிலும் பறக்கவிடப்படவேண்டும் என்பது அப்போதைய நியதி. ஆனால் சென்னை மாகாண அமைச்சரவை பதவியேற்ற பின்பு திருவைகுண்டம் பஞ்சாயத்தில் 30.09.1937க்குப் பின்பு தேசிய மூவர்ணக் கொடியே ஏற்றப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. அதனைச் செயல்படுத்தியும் வந்துள்ளனர். அதே போல 1937க்குப் பின்பு பஞ்சாயத்தின் கூட்ட நடவடிக்கைகள் பற்றிய பதிவேடு (மினிட்புத்தகம்) தமிழில் எழுதப்படும் முறையும் பின்பற்றப்பட்டது. 1937க்கு முன்பு ஆங்கில மொழியில்தான் பதிவேடுகள் பராமரிக்கப்படவேண்டும் என்பது விதியாகும். இதன்மூலம் பஞ்சாயத்தின் தேசப்பற்றும். விடுதலை வேட்கையில் அதற்கு இருந்த துணிச்சலும் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
1939ல் பூரண மதுவிலக்கையும் ஆலயப் பிரவேசத்தையும் உடனே அமுல்படுத்தவேண்டும் எனவும். பஞ்சாயத்து அலுவலர்கள் அனைவரும் கதர் அணிய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


