1947ல் தென்னிந்தியாவில் தொண்மையான திருமடமான திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு மத்தியரசு அளித்த முக்கியத்துவம் போல இன்று பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழக வருகையில் தொடர் நிகழ்வுகளுக்கிடையிலும் முக்கியத்துவம் அளித்துள்ளது. மிக தொண்மையான சைவ ஆதீனம் ( ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய ஆதீனம்) மதுரையாதீனம் 293வது ஸ்ரீலஸ்ரீ குருமஹாசந்நிதானம் அவர்கள் சந்திக்க நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட நேரங்களுக்கு மேலாக சந்தித்து உரையாடிய பாங்கு பண்டைய காலங்களில் மாமன்னர்களும், மன்னர்களும் சைவ திருமடங்களை பாதுகாத்தும், பல நிவந்தகளையும் வழங்கியும் போற்றி வணங்கியை நிகழ்வுகளை நினைத்து பார்க்கும் வண்ணம் உள்ளது. நமது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் செய்கை அனைவருக்கும் ஆச்சரியத்தினை அளித்துள்ளது. என்றென்றும் மிகுந்த நன்றியோடு சைவ உலகம், ஆதீன அடியவர்கள், சீடர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாரத பிரதமரை போற்றி மகிழ்கிறார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் வேறு ஒரு காரணமும் இருப்பதாக கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
காரணம் மதுரை ஆதினத்துக்கு பாஜக அரசு நியமன எம்.பி பதவி கொடுக்க உள்ளதாக கூறுகிறார்கள்.
அது உண்மையாக இருந்தால் திருநெல்வேலி மாவட்டம் , திருநெல்வேலி டவுண் புட்டாரத்தியம்மன் தெருவை பூர்வீகமாக கொண்ட மதுரை ஆதீனம் எம்.பி பதவி அடையதன் மூலம் தமிழகமும் , நமது நெல்லை பூமியும் பெருமையடையும்.
மதுரை ஆதினத்துக்கு எம்.பி பதவி கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


