வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் பொதுமக்கள் மான்களை கண்டு ரசிப்பதற்கு வசதியாக ‘சூழல் சுற்றுலா தொடங்குவதற்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வெளிமான் சரணாலயம்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் 14.6 சதுர கிலோ மீட்டர் பரப்பில் வெளிமான் சரணாலயம் அமைந்து உள்ளது. இங்கு வெளிமான், புள்ளிமான், மிளா, முயல், நரி, பலவகை யான பாம்புகள், முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளும், ஏராளமான வகை பறவைகளும் காணப்படுகின்றன.இந்த சரணாலயத்தில் மான்களை பொதுமக்கள் கண்டு ரசிக்க வசதியாக ‘சூழல் சுற்றுலா’ தொடங்குவதற்கு வனத்து றையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் நிருபர்களிடம் கூறியதாவது:136 வகையான பறவைகள்,வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப் பில் 225 வெளிமான்கள், 53 புள்ளி மான்கள், 36 மிளா ஆகியவை கண்ட றியப்பட்டு உள்ளன. இதேபோல் பறவைகள் கணக்கெடுப்பில், மாவட் டம் முழுவதும் 136 வகையான பற வைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் வல்லநாடு சரணாலயத்தில் 86 வகையான பறவைகள் உள்ளன. இது கண்ணால் பார்த்து கணக்கிடப் அளவிலான மான்கள் இருக்க
பட்டவைதான். இதைவிட அதிக அளவிலான மான்கள் இருக்கபட்டவைதான். இதைவிட அதிகவாய்ப்பு உள்ளது. இதனால் சரணாலயத்தில் 4இடங் களில் நவீன கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தி உள்ளோம். அதில் ஏராளமான மான்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. இதனால் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்க அறிவுறுத்தி உள்ளேன்.
சூழல் சுற்றுலா
இந்த சரணாலயத்தில் ‘சூழல் சுற்றுலா’ தொடங்குவதற் கான நடவடிக்கை எடுக்கப்படும். சரணாலயத்தின் நுழை வுப்பகுதியில் இருந்து மலையின் இருபுறமும் சுமார் 4 கிலோ மீட்டர் வரை பொதுமக்கள் சென்று மான்களை கண்டு ரசிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் மான்கள் எந்த இடத்தில் அதிகமாக வரும், எந்த இடத்தில் இருந்து பார்க்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகி றோம். விரைவில் அந்த பகுதிகள் அடையாளம் கண்டறியப் பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பொதுமக்கள் மான் களை கண்டு ரசிக்க வசதியாக ‘சூழல் சுற்றுலா’ தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மான்கள் பொதுவாக புல்வெளியை அதிகம் விரும்பக்கூ. டியவை. இதனால் வல்லநாடு சரணாலயத்தில் புல்வெளி பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகி றோம். இங்கு சுமார் 1,000 ஏக்கர் பரப்பில் மலைகள் மட்டுமே உள்ளன. மற்ற பகுதிகளிலும் மண் மிகவும் குறைவாக உள்ளது. அதனை பயன்படுத்தி சுமார் 100 எக்டர் பரப்பில் புல்வெளியை உருவாக்க நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம்.
விழிப்புணர்வு
இந்த சரணாலயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் காடுகளை அதிக ரிப்பதற்காக 4 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


