மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பனை பொருள் உற்பத்தியாளர் குழு பெண்களுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன தலைவரும் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகம் உதவி இயக்குனர் திரு.பிரபாகரன் மற்றும் தமிழ்நாடு சமூக பாதுகாப்புத் துறை திருமதி. செல்வி பிளாரன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.லீடு டிரஸ்ட் நிறுவன இயக்குனர் திருமதி . எஸ் பானுமதி நன்றி கூறினார்.


