வல்லநாடு மருதூர் கீழக்கால் மடை எண் 4,5 பாசன கால்வாய்களை தூர்வாரும் பணியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் சகோதர் மோகன் சி லாசரஸ் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மருதூர் கீழக்கால் வாய்க்கால் தூர்ந்து போய் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.இதனால் அப்பகுதி பாசன விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் சகோதர் மோகன் சி லாசரஸிடம் மருதூர் கீழ கால்வாய்களை தூர்வார உதவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் விவசாயிகளின் நலன் கருதி நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புதுவாழ்வு சங்கம் சார்பில் மருதூர் கீழக்கால் வாய்காலை தூர்வாருவதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் மருதூர் கீழக்கால் வாய்காலில் தூர்வருவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் சகோதர் மோகன்சிலாசரஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மற்றும் பாசன நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்க விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.தூர்வாரும் பணியின் மூலம் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வாய்க்காலும், 440 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார், சமூகத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.


