செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவனாலயம் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கரபாதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் வருசாபிசேகம் 25 ந்தேதி நடைபெறுகிறது. இதையட்டி கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தீர்த்தம் செய்துங்கநல்லூரில் அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. அதன் பின் கோயிலை வந்தடைந்தது. 25ந்தேதி காலை 6 மணிக்கு கடம் புறப்பட்டு வருசாபிசேகம் நடக்கிறது. அதன் பின் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக பேரரவை செய்திருந்தது.


