தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த குப்பனா மரைக்காயர் மகன் காதர் மொகைதீன்.
இவருக்கு சொந்தமான பழைய வீடு ஒன்று அதே பகுதியில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆழ்வார்திருநகரி சமத்துவபுரத்தை சேர்ந்தவர்களான கணேசன் மகன் சுடலைமுத்து (20), மற்றும் பால்ராஜ் மகன் பெருமாள் (20) ஆகிய இருவரும் காதர் முகைதீனின் பழைய வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த கதவில் உள்ள பித்தளை கைப்பிடிகள் மற்றும் இரும்பு தாழ்ப்பாள் போன்றவற்றை திருடி கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
இதுகுறித்து காதர் முகைதீன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜாராபர்ட் வழக்குப்பதிவு செய்து சுடலைமுத்து மற்றும் பெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 5000/-மதிப்பிலான பித்தளை கைப்பிடிகள் மற்றும் இரும்பு தாழ்ப்பாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.


