ஏரல் அருகே மகள் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்தால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள புதுமனை நாடார் குடியிருப்பை சேர்ந்தவர் செல்லப்பாண்டி மனைவி விஜயலட்சுமி (45). இவர் தனது மகளை, தனது உடன்பிறந்த தம்பிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தாராம். அதற்கு அவரது மகள் மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனால் மனம் உடைந்த விஜயலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


