பசுபதி தமிழ்த் திரைப்பட நடிகரும் மேடை நாடக நடிகரும் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமன்றி மலையாள, தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


