தூத்துக்குடி மாவட்டத்தில் 106 தேர்வு மையங்களில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. 21 ஆயிரத்து 21 பேர் தேர்வெழுதினர்.
தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-1 தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை கோவில்பட்டியில் 6 ஆயிரத்து 130 பேரும், தூத்துக்குடியில் 9 ஆயிரத்து 605 பேரும், திருச்செந்தூரில் 5 ஆயிரத்து 286 பேரும் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 21 பேர் 106 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
இன்று மொழிப்பாடம் தேர்வு நடந்தது. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். இந்த தேர்வை கண்காணிப்பதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 165 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 106 பேர் துறை அலுவலர்களாகவும், 106 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், 1494 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


