தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் ஓடுகிறது. நதியில் உள்ள நீர் கருவை செடிகளை அகற்றி மரம் நடும் பணியை தூத்துக்குடி மாவட்டஆட்சி தலைவர் மரு. செந்தில்ராஜ் கடந்த மாதம் 5 ந்தேதி துவககி வைத்தார். முதல் கட்டமாக ஆழிகுடி, ஆறாம்பண்ணை, முத்தாலங்குறிச்சி ஆகிய கிராமங்களில் நீர் கருவை மரங்களை அகற்றி மரககன்று நட்டார். தொடர்ந்து தாமிரபரணி கரை முழுவதும் இந்த பணியை செய்ய வேண்டும் என திட்டம் வகுத்திருந்தார். இதற்கிடையில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலர் மாட்ட ஆட்சி தலைவர் மரு செந்தில்ராஜ் அவர்களை சந்தித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணையில் இருந்து ஆத்தூர் வரை நீர் கருவை மரங்களை அகற்றி , மரம் நட்டு கரையை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது ஆழிகுடி பஞ்சாயத்து சமூக சேவகர் தினேஷ், கிராம உதயம் ஆழ்வார் தோப்பு கிளை மேலாளர் வேல்முருகன், தன்னார்வலர் ராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சி தலைவர் உறுதி கூறினார். விரைவில் தாமிரபரணி சமூக ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.


