செய்துங்கநல்லூரில் மெயின் பஜாரில் மே தின விழா கொண்டாடப்பட்டது. செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார் . சிறப்பு விருந்தினராக சப் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன், கருத்தையா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பஞ்சாயத்து உறுப்பினர் பட்டு ராஜ் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் சுடலை முத்து, சுவீட் கணேஷ், உள்பட பலர் கலந்துகொண்டனர். கொம்பையா நன்றி கூறினார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.


