மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க. ஸ்டாலின் அவர்களை தமிழகஹாக்கி சீனியர் ஆடவர் அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற 12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக ஹாக்கி ஆடவர் அணி வீரர்கள் மற்றும் அணி மேலாளர் சார்லஸ் டிக்சன், பயிற்சியாளர் முத்துகுமரண் ஆகியோரை சந்தித்து மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க. ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார் இந்த சந்திப்பின்போது வீரர்கள் தாங்கள் வென்ற கோப்பையை மாண்புமிகு தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தமிழக முதல்வருக்கு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். உடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலு,ராசா ஆகியோர் உடனிருந்தனர்.
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் மனோகரன்,செந்தில் ராஜ்குமார்( பொறுப்பு) பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர்கள் ஒலிம்பியன் திருமால்வளவன், திரு. கிளமெண்ட் லூர்துராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


