நாசரேத் அருகிலுள்ள ஞானராஜ் நகரில் 29 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள, மூக்குப்பீறி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட ஞானராஜ் நகரில் கடையனோடையில் இருந்து குடிநீர் பைப் லைன் கொண்டுவருவதற்கு ரூபாய் 15 லட்சமும்,ஞானராஜ் நகரில் சம்ப் அமைப்பதற்கு 7 லட்சமும், பைப் லைன் வஇஸ்தீரனத்திற்கு 7 லட்சமும் மொத்தம் 29 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கமலா கலைஅரசு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழ்வார்திருந கரி ஒன்றிய குழுத்தலைவர் ஜனகர் வரவேற்றுப் பேசினார். புதிய திட்டபணி களுக்கு தமிழக மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதாா ஆர்.இரா தாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் திமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன் குமார் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் அய்யாதுரை, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனசிங், வார்டு உறுப்பினர்கள் கலையரசு, பாலசுந்தர் கிரேஸ், பிச்சைக்கனி, பாக்கியசீலி, அந்தோணி கிறிஸ்டி, சித்திரை செல்வி விஜயா, திமுக ஒன்றிய பிரதிநிதி காந்தி, சமூக ஆர்வலர் ராம்குமார், சமத்துவ மக்கள் கழகம் ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ், கணேசன், நாசரேத் நகர திமுக பிரமுகர் ஜமீன் சாலமோன், மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், ஐ.டி விங் மாவட்ட செயலாளர் பேரின்பராஜ், நகர செயலாளர் ராஜ்குமார், ராமச்சந்திரன், காலனி கருத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


