திருநெல்வேலி தாழையூத்து சங்கர்நகர் வடக்குச்செல்வி அம்மன் கோவிலில் பாரம்பரிய சிலம்பாட்ட கலையின் பாரம்பரிய சடங்கினை மீட்டெடுத்து மீண்டும் உயிரூட்டி பறை சாற்றி காட்சிப்படுத்தும் விதமாக சிலம்ப கலையின் சிறந்த வீரர்களுக்கான முதன்மை அங்கீகாரத்தை வழங்கி கௌரவப்படுத்தும் வகையில் சிலம்ப கலைக்கே உரித்தான வீரசங்கிலி அணியும் விழாவுடன் உஸ்தாத் என்ற பட்டமும் சேர்த்து வழங்கப்பட்டது.
இதில் உடையார்பட்டி நினைவில் வாழும் சிலம்ப மகா குரு உஸ்தாத் லெட்சுமண பாண்டியனின் அபிமான சீடரான சிலம்ப மகாகுரு கலைநன்மணி, வர்மக்கலை நிபுணர் தன்னிகரற்ற சங்கரன் ஆசான், திருமலை சிலம்ப கலை கூடத்தின் தலைமை வாத்தியார் முத்துகிருஷ்ணனுக்கு வீர சங்கிலி அணிவித்து உஸ்தான் பட்டம் வழங்கினார் .
இதில் சங்கர்நகர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன் தலைமை வகித்தார். சங்கர்நகர் சேர்மன் பட்டுலெட்சுமி காளியப்பன், நாரணம்மாள்புரம் சேர்மன் உமா மகேஷ்வரி செல்வபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த தாசன், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ், திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தாழையூத்து இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, கேன்பிரிட்ஜ் பள்ளி சேர்மன் தயாசங்கர், திருநெல்வேலி மாவட்ட தடகள சங்க பொருளாளர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட அமைச்சசூர் கபடி கழக துணைத்தலைவர் நாகராஜன், தொழில் அதிபர் முருகேசன், வழக்கறிஞர்கள் ராஜா, சிவகணேசன், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். சங்கர்நகர் திருமலை சிலம்ப பள்ளி தலைவர் இசக்கி நன்றியுரையாற்றினார்.
இறுதியாக சங்கரன் ஆசான் வீரசங்கிலி அணிவித்து விழாவை சிறப்பித்தார்.


