மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் ஈஸ்டரை முன்னிட்டு இலவச மரக்கன்று மற்றும் தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேராயர் பர்னபாஸ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு, மக்களுக்கு மரக்கன்று மற்றும் தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்கினார். கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். தனி அலுவலர் இராமசந்திரன், பகுதி அதிகாரி கண்ணன், தன்னார்வ தொண்டர் விஜய ஏஞ்சல், மைய தலைவர் மலர்கொடி , செல்வி, உள்பட பலர் கலந்துகொண்டனர்


