இன்று ( ஏப்.14) அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள்.நமது நவநாகரீக சமூகத்தின் சிற்பியவர்.
அவரது பிறந்தநாள் இந்த ஆண்டுமுதல் *சமத்துவதினமாக* கொண்டாட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளமை சாலச் சிறந்த செயல்.
இந்நாளில் சமத்துவத்தை வலியுறுத்தும் உறுதிமொழியை ஒவ்வொருவரும் *மனதில்* மொழிய அன்போடு வகுத்தளிக்கப்பட்டுள்ளது இத்தினத்தின் கூடுதல் சிறப்பு.
அந்த உறுதிமொழியாவது.
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்
சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,
ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,
எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,
சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,
சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் எனவும் உளமாற உறுதியேற்கிறேன்.*
சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவரும் இந்த உறுதியை மனதில் ஏற்போம்.


