தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் தகவல்கள் அந்தந்த துறை சார்பில் இணையதளங்களில் பதிவு செய்யப்படும். இந்நிலையில் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் (TET) இணையதளமான இன்று 3வது நாளாக செயல்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பிக்கும் தேதி இன்று (ஏப்.13) கடைசி நாள். ஆனால் கடந்த 3 நாட்களாக விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முடங்கிக் கிடக்கிறது. எனவே அரசு இணையதளத்தை உடனடியாக சரிசெய்து விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாளை மேலும் 10 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


