தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தூத்துக்குடி சிவில் சப்ளை தாசில்தார் செல்வக்குமார் தூத்துக்குடி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி தாசில்தாராக பணியாற்றிய ஜஸ்டின் செல்லத்துரை சிவில் சப்ளை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி நகர நலவரித் திட்ட செட்டில்மென்ட் தாசில்தாராக பணியாற்றிய லட்சுமி கணேஷ் சிப்காட் நிலஎடுப்பு (அலகு-4) தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சிப்காட் நிலஎடுப்பு அலகு-7 தாசில்தாராக பணியாற்றிய சிவகாமி சுந்தரி தூத்துக்குடி நகரநலவரித்திட்ட செட்டில்மென்ட் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவில்பட்டி தாசில்தார் அமுதா, தூத்துக்குடி சிப்காட் நிலவங்கி தாசில்தாராகவும், சிப்காட் நிலஎடுப்பு அலகு-2 தாசில்தாராக பணியாற்றிய சுசிலா கோவில்பட்டி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.


