கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் சித்ரா பௌர்ணமி பிரம்மோத்சவம் தொடங்கியது.
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி கரையில் உள்ள கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 10 நாட்கள் உற்சவ விழா வருடம் தோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.
அதே போல் இந்தாண்டிற்கான விழா இன்று காலை தொடங்கியது. அதில் முதல் நாளான இன்று காலை 8.45 மணிக்கு கால் நாட்டு விழா துவங்கியது. காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு தேங்காய் சாற்றி பந்தல் கால் பூஜை நடந்தது. 8.45 மணிக்கு கால் நாட்டப்பட்டது. பின்னர் உற்சவர் தாயார்களுடன் தெற்கு கோவிலுக்கு எழுந்தருளி திருமஞ்சனம் நடந்தது. இரவு 9 மணிக்கு தோளிக்கினியானில் மலை மேல் வலம் வருவார்.
ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருடவாகனம், குதிரை வாகனம், சேஷ வாகனம், பொன் சப்பரம், யானை வாகனத்தில் வரும் நிகழ்ச்சி நடைபெறும் தொடர்ந்து 10 திருவிழாவில் பொன்னிற சப்பரத்தில் மலை இருந்து கீழே இறங்கி வரும் காட்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் அர்ச்சகர் ரமேஷ், நாராயண சீனிவாசன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் இசக்கியப்பன், ஸ்ரீவைகுண்டம் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, கருங்குளம் கட்டளைதார்கள் ஹரிஹர சுப்பிரமணியம், ராமன், கண்ணன், சங்கர், சேகர், நடராஜன், வெங்கட்ராமன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


