தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா ஸ்ரீ வைகுண்டம் டி.வி.எஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜணனி ,சித்த மருத்துவர் சுப்பையா பாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர் ராமலெட்சுமி அய்யம்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டனர். டி.வி.எஸ் அறக்கட்டளை வேளாண் அலுவலர் சிவபிரசாத்மித்ரா , மற்றும் களப்பணியாளர் கணேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகை தோட்டம் அமைப்பது குறித்து ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில் செய்து தருவதாக டி.வி.எஸ் நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.


