கருங்குளம் ஒன்றியம் 13 வது மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியான 15 வது நிதிகுழு மூலமாக பயணிகள் நிழற்கூடம் வசவப்புரத்தில் கட்டப்பட்டுள்ளது. 6 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நிழற்கூடம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட சேர்மன் சத்யா தலைமை வகித்தார். 13 வார்டு மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி நிழற்கூடத்தினை திறந்து வைத்து பேசினார். தூத்துக்குடி பைபாஸ் சாலை அமைத்த பிறகு வசவப்பபுரம் விலக்கில் பொதுமக்கள் பயணிகள் நிழற்கூடம் இன்றி தவித்து வந்தனர். தற்போது அந்த நிழற்கூடம் 13 வது மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் முயற்சியில் ஏற்பாட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்கூடம் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் லெட்சுமண பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ மோகன், அய்யாத்துரை பாண்டியன், சுடலை கண்ணு உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


