ஆசீர்வாதபுரம் பள்ளியில் 12வயது முதல் 14வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. மத்திய அரசு 12வயது முதல் 14 வயதுள்ள பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதித்துள்ளது. அதன்படி சாத்தான்குளம் அகுகே ஆசிர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 12வயது முதல் 14வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதில் ஆழ்வார்திருநகரி மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ பணியாளர்கள், இடைநிலை சுகாதார செவிலியர் மெர்சி
சுகாதார ஆய்வாளர்கள் ஜேகராஜ், மகேஷ்குமார் ஆகியோர் மாணவர்களை பரிசோதித்து அனுமதியுள்ள கார்போபேக்ஸ் எனும் கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதற்கட்டமாக 40 மாணவ,மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில் பள்ளி தலையை அரசு ஆசிரியர் மாணிக்கம், உதவி தலைமை ஆசிரியர் சோப்பார். உடற்கல்வி ஆசிரியர் சாமுவேல் பொன்னையா உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.


