சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிகரம் அறக்கட்டளை சார்பில் உலக நீர் தினவிழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இம்மானுவேல் தலைமை வகித்தார்.சிகரம் இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தார்.இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளர் ஜெயா கலந்துகொண்டு, கட்டுரை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் கிராம வருவாய் உதவியாளர் ரவிக்குமார், உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பொறியாளர் ராஜா நன்றி கூறினார்.


