சாத்தான்குளம் வட்டார,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டை குறித்த விவசா யிகள் பெருவிழா எழுவரைமுக்கி கிராமத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் சுஜாதா வரவேற்றார். காட்வின், இயற்கை விவசாயம் குறித்தும், அசோலா நீலப்பச்சை பாசி அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா ரைசோபியம் குறித்தும், ஓய்வுபெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குநர் மகாதேவன். மண் வள
மேம்பாடு மண் மாதிரி எடுத்தல், நீர் மாதிரி எடுத்தல் குறித்தும். மானூர் ஆறுமுகம் இயற்கை விவசாயம் குறித்தும் விளக்கம் அளித்தனர். இதில் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு பயிற்சி மாணவிகள் மண்வளம் மேம்பாடு குறித்து விவசா யிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதில் எழுவரைமுக்கி ஊராட்சித் தலைவர் ஜெயா உள்ளிட்ட விவசா யிகள்பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் உதவி வேளாண்மை அலுவலர் சிவராமன் நன்றி கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலாகள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.


