இந்த வருடம் நெல்லையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பொருநை நெல்லை புத்தக கண்காட்சி என பெயரிட்டாலும் பெயரிட்டார்கள், நெல்லை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் கொட்டிக்கிடக்கிறது. அதிக அளவிலான நெல்லை சம்பந்தப்பட்ட புத்தகங்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதியுள்ளார். இவரது புத்தகங்கள் சுமார் 25 க்கு மேற்பட்ட புத்தகங்கள் ஒரே ஸ்டாலில் கிடைக்கிறது. குறிப்பாக வரங்களை அள்ளித்தரும் வல்லநாடு சித்தர், சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகைமலை, ஆதிச்சநல்லு£ர் வழக்கு எண் 13096 / 2017, அத்ரிமலை யாத்திரை , அருள் தரும் அதிசய சித்தர், ஜமீன் கோயில்கள் , தேரிக்காட்டு ஜமீன் வரலாறு , தவழ்ந்து வரும் தாமிரபரணி, நவீன தாமிரபரணி மகாத்மியம் , கரிசல் காட்டு ஜமீன்தார்கள், தலைத்தாமிரபரணி , தென்நாட்டு ஜமீன்கள், ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் , நெல்லைத் துறை முகங்கள், பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும்& அருங்காட்சியகங்களும், நெல்லை வரலாற்று சுவடுகள், சிங்கம்பட்டிஜமீன்தார்கள் உள்பட நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தினை சார்ந்த புத்தகங்கள் ஸ்டால் எண் 119 காவ்யா பதிப்பகத்தில் ஒரே இடத்தில் கிடக்கிறது.
கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம், வள்ளியூர் வரலாறு, ஊத்துமலை ஜமீன், நெல்லை வட்டார தெய்வங்கள், உள்பட பல நூல்களும் இந்த ஸ்டாலில் கிடைக்கிறது.
நாறும்பூ நாதர் எழுதிய திருநெல்வேலி நிலம் நீர் மனிதர்கள்,வேணுவன மனிதர்கள், சௌந்திரமகாதேவன் எழுதிய திருநெல்வேலி நினைவுகள், இசக்கி அவர்கள் எழுதியது பாளையங்கோட்டை நினைவுகள், சுகா எழுதிய மூங்கில் மூச்சி, தயார் சன்னதி, தோ.பா எழுதிய பாளையங்கோட்டை மூதூர் வரலாறு, உள்பட பல புத்தகங்களும் இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கிறது.
பொருநை அருங்காட்சியகம் மாதிரி அருங்காட்சியகம் உள்பட பொருநை புத்தக கண்காட்சியை சிறப்பு படுத்திய மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு மற்றும் பொறுப்பாளர்களை பார்வையாளர்கள் பாராட்டி செல்கிறார்கள்.


