நெல்லை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் ஜோஸபின் பாபா நூல் வெளியிடப் பட்டுள்ளது. திரைப்படங்களில் பெண்கள் (இரவின் ஆன்மா) , சலன சித்திரங்களில் சமூகம் என்ற திரைப்படங்களின் மதிப்பாய்வு என்ற இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது. நூலை எழுத்தாளர் நாறும்பூ நாதர் வெளியிட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முதல் பிரதிநிதியை பெற்றுக்கொண்டார். இந்த நூலைப் பற்றி வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பார்வதி முத்தமிழ், பாளையங்கோட்டை செயிண்ட ஜான்ஸ் கல்லூரி உதவி பேராசிரியர் பெலிகஸ் பிரான்சி ஆகியோர் நூல் திறனாய்வு செய்தனர். ஜோஸபின் பாபா ஏற்புரை வழங்கினார்.


