ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்த கண்ணன் என்ற திரவியம் மகன் சொர்ண பாண்டி. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு ஆனந்தி என்ற மனைவி மற்றும் திருநீலகண்டன் என்ற மகனுடன் வெள்ளூரில் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களான வெள்ளூரை சேர்ந்த ராமர் மற்றும் மந்திரமூர்த்தி ஆகியோருடன் ஆட்டோவில் வெள்ளூர் கஸ்பா குளம் அருகே செல்லும்போது ஆட்டோ நிலைதடுமாறி ஆட்டோ குளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ ஓட்டி வந்த சொர்ணபாண்டி ஆட்டோவின் கீழே மாட்டி கொண்டார்.
அந்த வழியாக வந்தவர்கள் ஆட்டோவில் மாட்டிக்கொண்ட சொர்ண பாண்டியை வெளியே எடுத்து ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதையடுத்து அவரது உடல் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


