பாளை வஉசி மைதானத்தில் நடந்து வரும் பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் ஒரு சிறப்பு நிக்ழ்ச்சியாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாளான நேற்று காகிதக் கலை பயிற்சி நடத்தப்பட்டது.வண்ணத்தாள்கள் கொண்டு அழகிய கலைப் பொருட்கள் தயாரிக்கும் இந்த பயிற்சியினை வருவாய் அலுவலர் சுகன்யா தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சியை, கலையாசிரியர் சொர்ணம் நடத்தினார்.சாராள் தககர் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாளை பனை ஓலை கொண்டு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது.பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று,நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.


