நாலுமாவடியில் 12 ஆம் தேதி வியாபாரிகளுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம் வருகிற சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடைபெறுகிறது.
துத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் தொழில் மற்றும் வியாபாரம் ஆசீர்வாதமாய் இருக்க வேண்டி, வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்காக வருகிற 12ம் தேதி (சனிக்கிழமை) சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஆசீர்வாத உபவாசஜெபம் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறுகிறது.
தேவனால் ஆசீர் வதிக்கப்பட்ட பலதொழில் அதிபர்களின் அனுபவ சாட்சி தேவ ஆலோசனைகளும் ஜெபங்களும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஆசீர்வாத உபவாச ஜெப குழுவினர் செய்துள்ளனர். கூட்டம் முடிந்தவுடன் திரும்பி செல்ல அரசு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


