ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் சிறப்பு முகாம் நடந்தது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்குமான குறைதீர் சிறப்பு முகாம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.
அவர்களிடமிருந்து 210 மனுக்கள் பெற்று அதற்கான தீர்வு காணப்பட்டது. ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் உதவித் தொகைக்கான உத்தரவுகளை ஸ்ரீவைகுண்டம் சமூக நல தாசில்தார் ரமேஷ் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் பயனாளிகளுக்கு உடனடி தீர்வு கண்டு ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் உதவித் தொகைக்கான உத்திரவுகளை வழங்கினார். இம்முகாம் ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் சமூகநல தாசில்தார் ரமேஷ் செய்தார்.


