செய்துங்கநல்லூர் பஜார் திடலில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் மணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார். திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், சமையல் கேஸ் விலைவாசி மற்றும் மற்ற பொருள்கள் மீது விலைவாசி ஏறுவதை கட்டுப்படுத்த வேண்டியும் கறுப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ செயலாளர் கண்ணன், டி.ஓய். எப் .ஐ தலைவர் கொம்பையா, கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


