ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மளவராயநத்தத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் உறவினரான செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மலவராயநத்தத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரின் உறவினர் பெண்காவலர் ஒருவர் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் பெண் காவலரையும், அவரது கணவர் மற்றும் 2 குழந்தைகளையும் அவரின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். மேலும் இவர் கடந்த 28 ந்ததிக்கு பிறகு காவல்நிலைய பணிக்கு வரவில்லை. ஆயினும் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் அவருடன் பணிபுரிந்த போலிசார் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபலன் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் சேரகுளம் சுப்பிரமணிய புரத்தினை சேர்ந்த ஒருவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளார். அவரை தென்திருப்பேரை பஸ் நிலையத்தில் வைத்து மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப பட்டார். தற்போது அவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. எனவே செய்துங்கநல்லூர், சேரகுளம் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.


