தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் காமராஜர் இலட்சியப் பேரவை சார்பில் வேட்பாளர் பிரசன்னா குமார் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இன்று இரண்டாம் நாள் வேட்புமனுத் தாக்கலின் போது, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் பிரசன்னா குமார் (40). இவர் காமராஜர் இலட்சியப் பேரவையின் நிறுவனர் ஆவார். இன்று தூத்துக்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் தனது வேட்புமனுவை வழங்கினார்.
வேட்புமனுத் தாக்கலின் போது, பெருந்தலைவர் மக்கள் நல இயக்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன், காமராஜர் இலட்சியப் பேரவையின் மாநில நிர்வாகிகள் ராம்குமார், மைக்கேல் ராஜ் மற்றும் பிரவீன் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.


