Description
முடிச்சு மேலே முடிச்சு என்ற தலைப்பில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நாடகமே இந்த நூல். இது ஒரு மேடை நாடகம் நகைச்சுவை மாமியார் மருமகள் சண்டை பில்லி சூனியம் என சுவையான சம்பவங்களை கொண்ட இந்த நாடகத்தின் முடிவில் இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளார் 1995ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் வெட்டிக்குளம் என்னும் கிராமத்தில் இவர் எழுதிய கதாநாயகனாக நடித்த நாடகம் சுமார் 27 வருடங்கள் கழித்து மீண்டும் அரங்கேறியது அனைவரும் மனதிலும் இடம் பிடித்தது. இதில் எழுத்தாளரின் மகன் அபிஷ் விக்னேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நாடகம் அப்படியே கிராமத்தோடு கிராமமாக அழிந்து போய் விடக்கூடாது என மீடியா கிறுக்கன் சேனலில் பிரசுரம் செய்துள்ளார் தொடர்ந்து நூலாக ஆக்கப்பட்டுள்ளது கிராமங்களில் மேடை நாடகம் நடிப்போருக்கு நல்லதொரு நூல் இதுவாகும்