கரிசல்காட்டு ஜமீன்தார்கள் – முத்தாலங்குறிச்சி காமராசு

270.00

Description

அப்பாசாமி என்பவர் மூலமாக இளசை வேந்தனின் இளமை சாதனைகள் என்ற ஆய்வேட்டை சேகரித்துக் கொண்டேன். அதில் இளையரசனேந்தல் ஜமினின் முழுமையான வரலாறு கிடைத்தது.

இளையரசனேந்தல் குருவிகுளம் ஜமீன்தார் வரலாறு கிடைக்க பல்வேறு நண்பர்கள் உதவினார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலை உருவாக்க எனக்கு ஐந்து வருடங்கள் ஆனது. சுமார் 20 முறை இளையரசனேந்தல் குருவிகுளம் கோவில்பட்டி கொண்ட பகுதிகளுக்கு சென்று வந்தேன்.

முழுக்க இது ஒரு வரலாற்று நூல். இந்த வரலாறுகள் அனைத்துமே பொக்கிஷம். கொஞ்ச காலம் கடந்தால் கூட ஆவணப்படுத்த முடியாமல் அழிந்து விடும்.
உண்மையிலேயே கரிசல் காட்டு ஜமீன்தார்கள் நூல் எழுதும்போது மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. ஆனாலும் நூல் எழுதி முடித்தபடி மன நிறைவு இருந்தது.