Description
இந்த நாவல் எழுதுவதற்கு முழு காரணம் திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் அய்யா அவர்கள்தான். நான் “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” எழுதும் போது தூத்துக்குடி மாவட்ட திரைப்பட இயக்குனர்களை பட்டியலிட்டேன்.
அந்த பட்டியலில் திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் அவர்களை பற்றியும் எழுதியிருந்தேன். இந்த புத்தகத்தினை கழுகுமலை வருகை தந்த இயக்குனரிடம் மரியாதைக்குரிய அய்யா கழுகுமலை முருகன் அவர்கள் கொடுத்துள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் என்னை பற்றி பேசியுள்ளார்கள்.
உடனே என்னோடு இயக்குனர் தொடர்பு கொண்டார். ஏற்கனவே நான் இயக்குனரின் நூலை படித்துள்ளேன். மேலும் அவர் படங்களை பார்த்து ரசித்துள்ளேன். அவரது நடிப்பை அங்காடித்தெருவில் பார்த்து வியந்துள்ளேன். எனவே அவர் என்னோடு பேசியவுடன் மகிழ்ச்சி அடைந்தேன்.






