 
                தொடர்மழை காரணமாக கிடைத்துள்ள நீரை தாமிரபரணி ஆற்றின் மூலம் அனைத்து குளங்களுக்கும் வழங்கிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மழைநீர் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய் மூலம் தாமிரபரணி ஆற்றின் நீர் கடைசி பாசன குளமான எல்லப்பநாயக்கன் குளத்திற்கும் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. எனவே எல்லப்பநாயக்கன் குளத்தில் இருந்து தண்ணீர் பெறும் குலசேகரன்பட்டினம் தருவைக்குளத்திற்கு இந்த முறையாவது தண்ணீர் வழங்கப்படுமா என்று உடன்குடி மற்றும் குலசேகரன்பட்டினம் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
                            
                        
	                    
 
                     
                     
                     
                    

