 
                தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தாெடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய அறிவுரைகளின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2025 மேற்கொண்டிட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள்/உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
                     
                     
                     
                    

