கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா இன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். உப தலைவர் செல்வராஜ், செயலாளார் ஜெயபாலன் பொருளாளர் சுரேஷ் குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம் மற்றும் பள்ளி பொருளாளர் பாஸ்கரன் ஆலோசனையின்படி விழா நடைபெற்றது.
பள்ளிக்குழு உறுப்பினர்கள், ஆ.செல்வம், செந்தில்குமார், ரவிமாணிக்கம், பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் விழாவினை தொடங்கி வைத்தனர். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி சுகவர்ணா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சிவராணி, செல்வவிமலா, மற்றும் ஆசிரியப்பெருமக்களும் அலுவலர்களும் செய்திருந்தனர்.


