
1931-32. வெள்ளை ஏகாதிபத்தியத் தின் ஆதிக்க வெறி நாடெங்கும் தலை விரித்து ஆடிய நேரம். ஏகாதிபத்தியத் தின் தொங்கு சதைகளான அதிகார வர்க்கத்தின் காட்டு தர்பார் சகிக்க முடியாத அளவுக்கு எல்லை மீறிய கால கட்டம்!
கொடுமைக்கு ஆளான இந்திய மக்கள் குமுறும் உள்ளத்துடன் செய்வ தறியாமல் திகைத்து நின்றனர். அந்த நேரத்தில் காந்திஜியின் தலைமையில் சுதந்திரச் சங்கநாதம் முழங்கிற்று. ஆமையாக அடங்கிக் கிடந்த மக்கள் அரிமாவாக மாறி புதிய தெம்புடன் விடுதலைக் களம் நோக்கி அணி வகுத்தனர். நாடெங்கும் பல்வேறு ரூபங்களில் போராட்டங்கள் வெடித்துச் சிதறின. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து தமிழக மக்களும் போர்க்கோலம் பூண்டனர்.
வெள்ளையனை எதிர்த்து விண்ண திரக் கிளம்பிய போர்க்குரல், பாரதத்தின் தென்கோடியிலிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் ( அந்நாளில் திருநெல்வேலி) திருச்செந்தூர் தாலூகா விலும் எதிரொலித்தது. விஸ்வரூபம் எடுத்துள்ள அந்த தாலூகா மக்கள் வெறி பிடித்த அதிகார வர்க்கத்தை சில நாட்கள் தங்கள் காலடியில் பணிய வைத்தனர்.
அந்த தாலூகாவில், எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராமல் சுதந்திர அக்கினி குண்டத்தில் தாங்களாகவே வந்து குதித்து வீர மரணம் அடைந்த தியாகிகள் எத்தனை? போலீஸ் தடியடி யால் கை, கால் ஊனமுற்று உருக் குலைந்து போனவர்கள் எத்தனை பேர்? மகனைப் பறிகொடுத்த தாய், தாயைப் பறிகொடுத்த மகன், கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் எத்தனை? எத்தனை?
தடியடி, துப்பாக்கிச் சூடு, தூக்கு மேடை எதையும் துச்சமென மதித்துப் போராடிய அந்த வீர, வீராங்கனைகளின் விடுதலை போதத்தை வர்ணிக்க வார்த் தைகளில்லை.
திருச்செந்தூர் தாலூகா மக்களின் அந்த வீரம் செறிந்த போராட்டங்களை யும், போராட்ட பலி பீடத்தில் தங்களின் தலைகளையும் விலையாகக் கொடுத்த வீர வரலாற்றையும் சற்று நினைவு படுத்தித் திரும்பிப் பார்ப்போம்.
1931&-32 வருடத்தில் உப்புச் சத்தி யாகிரகம், கள்ளுக்கடை மறியல், அந் நியத் துணி பகிஷ்காரம் ஆகியவற்றில் பலர் ஈடுபட்டனர். போலீஸ் அடக்கு முறை காரணமாக உயிரிழந்தவர்கள் ஏராளம். அந்த வரிசையில் தண்டுபத்து ஆறுமுகநயினார் போலீஸ் தடியடியால் காயம் பட்டு மரணம் அடைந்தார்.
காயல்பட்டிணம் கர்ணம் திரு. வெங்கிட்டராம முதலியார் வேலையை விட்டுவிட்டு சத்தியாகிரகத்தில் ஈடு பட்டார்.
போராட்டத்துக்கு தூண்டுகோலாக இருந்த வீரவநல்லூர் வி. வீரபாகு கொடுக்கும் போர் திட்டம் நிறைந்த துண்டு பிரசுரங்களை வரதராஜுலு நாயுடு,.கோசல்ராம், காயல் பட்டிணம் சம்சுதீன், வரிசை முகம்மது, செய்யது முகம்மது போன்ற இளைஞர்கள் ரயில்களிலும் மற்றும் எல்லா இடங்களிலும் ஒட்டி தாலூகா முழுவதும் தேசீய இயக்கத்தை பரவச் செய்தார்கள்.
1942 ஆகஸ்டு 9ம்தேதி தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் பாரதமே வெகுண்டெழுந்தது. ஆகஸ்டு11ந்தேதி ஆறுமுகநேரி இந்து உயர்நிலைப் பள்ளி முன் த. தங்கவேல் நாடார் தலை மையில் பிரம்மாண்டமான கூட்டம் கூடியது. எஸ். ஏ. ராமச்சந்திர டோக்கோ,.பி.எஸ்.ராஜகோபா லன், எம்.எஸ். செல்வராஜ் ஆகியோர் பம்பாய் தீர்மானம் பற்றி விளக்கினர்.வெள்ளையனை எதிர்த்து நாம்நடத்தும் இந்த போராட்டம் இறுதி போராட்டமாகும் என்றும் திருச்செந்தூர் தாலுகாவை பொறுத்தமட்டில் இங்கு அந்நிய அரசாங்கம் எதுவுமில்லை என் பதை நாட்டிற்கு நிரூபித்துக் காட்ட வேண்டுமென்றும்போராட்டம் எத்தகை யதாக இருக்கவேண்டுமென்பதை ரகசிய மாகக் கூடி முடிவெடுக்க 12ந் தேதிகாலை 8 மணிக்கு சந்தைக்கு முன்புள்ள அரச மரத்தடியில் கூட வேண்டுமென்றும் கோசல்ராம் அழைப்பு விடுத்தார்.
ஆகஸ்டு 12ந் தேதி மக்கள் சாரை சாரையாக வந்து கூடினர். சர்க்கார் அதிகாரிகளையும் ஊழியர்களையும் ராஜி னாமா செய்யும்படி செய்யவேண்டும். சர்க்கார் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்யவேண்டும் என்றும் கோசல்ராம் ஆவேசமாகப் பேசினார்.
கூடியிருந்த மக்கள் கூட்டம் உணர்ச்சிவசப்பட்டு எத்தகைய தியாக மும் செய்யத்தயார் என்று கூறி, தலைவர் களின் ஆணையைஎதிர்நோக்கிநின்றது. ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆறுமுக நேரி உப்பு பாக்டரி அதிகாரிகள் வீட்டை நோக்கி கூட்டம் ஆர்ப்பரித்து சென்றது. அரசாங்கமே இல்லை!
அதிகாரிகளை ஒவ்வொருவராகப் பார்த்து ராஜினாமாசெய் என்று கூட்டம் கோரியது. அதிகாரிகள் அதிர்ச்சிக்குள் ளானார்கள்; உப்பளத்தில் சத்தியாகிரகம் தொடங்கியது, (சர்வே நிர். 99ல்) உப்பு பாத்திகள் போடப்பட்டன சர்க்கார் அலுவலகங்கள் அனைத்தும் மூடும்படி செய்யப்பட்டன. தாலுகாவில் அரசாங்க மே இல்லையென்ற நிலை உருவானது. அடக்குமுறை ஆரம்பம் ஆகஸ்ட் 15. அதிகார வர்க்கம் தன் கைவரிசையைக் காட்டத்தொடங்கியது. ஆறுமுகநேரியில் மட்டும் சுமார்ஆயிரம் பேரை போலீஸ் கைது செய்து கடும் வெயிலில் (காலை 8 மணி முதல் மாலை5 மணி வரை) நிற்க வைத்தனர்
கைது செய்யப்பட்டவுடன் திரு. எம். எஸ். செல்வராஜ் “மகாத்மா காந்திக்கு ஜே! வந்தேமாதரம்” என்று கோஷமிட்டார். போலீஸார் அவரை கோஷம் போடாதே என்று சொல்லி, ஒருவர் அடித்து மற்றவரிடம் தள்ள, மற்றவர் அடித்து இன்னொருவரிடம் தள்ள, இப்படியாக அவர் மயங்கிவிழும் வரைஅடித்துகொடுமைப்படுத்தினார்கள்.
நடு இரவில் ஜெயிலில் அவரது விரல்களை மடக்கி கட்டி, நகக்கண்களில் ஊசி இறக்கி ரோமத்தைப் பிடுங்கி செங்கல் சிட்சை செய்து சித்திரவதை செய்தனர்.
நாட்டன் திரு. தங்கவேல் தாடார் என்பவரை மிருகத்தனமாக அடித்து சிறையிலடைத்தனர். அடி காரணமாக செத்துவிடுவாரோ என நினைத்து அவரை சில தினங்களில் வெளியே விட்டு வீட்டனர். ஆனால் அவர் கடுமை யான அடிபட்டதால் நெஞ்சில் ரத்தம் கட்டி மரணம் அடைந்தார். மேலும் எண்ணற்ற தொண்டர்களும் முதிய வர்களும், கடும் சித்திரவதைக்குள்ளானார்கள்
அடக்குமுறை அதிகமாக மக்களின் ஆவேச உணர்ச்சி கொந்தளித்து எழுந் தது. தாலூகா முழுவதும் ஏக காலத்தில் போராட்டம் என்றும் நடத்தப்பட வேண்டும் வெள்ளாளள்விளை காட்டி லுள்ள மணல்தேரியில் ஆகஸ்ட் 17 ந்தேதி இரவு 8 மணிக்குகூடவேண்டுமென்றும் துடியாக துடித்துத் கொண்டிருந்த தாலூகா மக்களுக்கு கோசல்ராம் அழைப்பு விடுத்தார்.
அழைப்பை ஏற்று ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கூடினார்கள்.கோசல்ராம் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.
மருதூர்கரை காத்தக்குட்டித் தலைவர் குற்றப்பரம்பரை சட்டத்தின் மூலம் நம்மை அடிமைகளாக நடத்தும் இந்த வெள்ளை அரசாங்கத்தை ஒழித்துக் கட்டுவதுவரை ஓயமாட்டோம். ஓயக் கூடாது என்று மறவர் குல மக்களுக்கு வீர கர்ஜனையோடு அழைப்பு விடுத்தார். கஜானாவை தகர்க்க பெஞ்சமின் தீர்மானம் திருச்செந்தூரிலுள்ள தாலூகா ஆபீஸையும் கஜானாவையும் தகர்த்து எறிய வேண்டுமென ஏ. எஸ். பெஞ்சமின் தீர்மானம் கொண்டுவந்தார். தாலூகாவைச் சுற்றி மலபார் ஸ்பெஷல் போலீஸ் இருப்பதால் நமது திட்டம் தோல்வியுறலாம் என்றார் மங்களா பொன்னம்பலம்.
தேவையான ஆயுதங்களை சேகரித்து கொண்டு போராடலாம் என்றும் நமது கூட்டம் தாலூகா பூராவிலுமுள்ள தந்தி கம்பிகளை வெட்டுவதன் மூலம் தந்தி போக்குவரத்தை துண்டிக்க வேண்டும் என்றும் குலசேகரப்பட்டணத்தில்வேலை நடக்க விடாமல் செய்யவேண்டுமென் றும் ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் நமது இயக்கம் ஊடுருவிச் செல்ல வேண்டும் என்றும் உருக்கமாகவும் வீராவேசமாகவும் கூட்டத் தலைவர் கோசல்ராம் பேசினார்:
. ஜி.இ. முத்து சித்தன்விளை ஆறுமுகநயினார் போன்றவர்கள் கோசல்ராம் கூறிய கருத்தை நிறை வேற்ற வேண்டுமென கூறினார்கள்.
அன்றுமுதல் தாலூகா முழுமையும் போராட்டம் பல்வேறு ரூபங்களில் தொடங்கியது. நாதன்கிணறு பூச்சிக் காட்டில் கிராம முன்சீப்புகளாக இருந்த நாராயண நாடார் சாமி நாடார் ஆகியோரின் தலைமையில் சுந்தர லிங்கம் ஆறுமுகவேல் நாடார், கந்தசாமி நாடார் உள்பட நூற்றுக்கணக்கான பேர்கள் கள்ளுக் கடையை தீ வைத்துக் கொளுத்தினார்கள் கிராமத்தில் யாரும் கள், சாராயம் குடிக்கத் கூடாது என கட்டுப்பாடு செய்யப்பட்டது. மீறியவர்கள் தலைமொட்டையடிக் கப்பட்டு கழுதைமேல் ஏற்றி ஊர்வல மாகக் கொண்டுவரப்பட்டனர். கள்ளுக் குடித்தவர் என்பதற்கு அடையாளமாக ‘க’ என்று தலையில் மொட்டையடிப்பார் கள். அவ்விதம் மொட்டையடித்த நாளி தர் சிவலிங்கம் என்பவரையும் அடித்து கைது செய்தார்கள்.
சர்க்கார் காடுகள் அழிக்கப்பட்டன. கிராம முன்சீப் நாராயண நாடார், சுவாமி நாடார் குடும்பமே கைதா னது. நாராயண நாடார் புதல்வர்கள் ஆறுமுகப் பாண்டியன், சிதம்பரபாண்டி யன் இருவருக்கும் தலா 12 கசையடி தண்டனை கொடுக்கப்பட்டது. அந்தக் கிராமமே போலீஸின் அட்டூழியத்துக்கு ஆளாயிற்று. தாய்மார்கள் முதல் குழந் தைகள் வரை தப்பவில்லை.
ஆகஸ்டு 18. திரு. கோசல்ராம் தலைமையில் முகமூடி அணிந்த நூற்றுக் கணக்கானவர்கள் குரும்பூர் ரயில் நிலை யம் நோக்கிச் சென்றனர். இரண்டு போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்றனர். ‘ஆயுதம் தேவை’ என்று வெள்ளாளன் விளை தேரியில் கோசல்ராம் கூறி யதை நிறைவேற்றும் முறையில் போலீ சாரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளை யும் முகமூடி வீரர்கள் பிடுங்கினார்கள். ஸ்டேஷன் தீக்கிரையாக்கப்பட்டது ஸ்டேஷனிலிருந்த சுதர் பண்டல் தனி யாக எடுத்துப்போடப்பட்டிருந்தது.
போராட்ட வீரர்களுக்கு தோட்டா வுடன் இரண்டு துப்பாக்கிகள் கிடைத் தன.
இம்மாதிரி இயக்கம் எங்கும் நடக்க ஆரம்பித்தது. குரங்கணி, துரைசுவாமி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் தந்திக் கம்பிகளை வெட்டியும் காடுகளை அழித்தும் போராடி னார்கள்.
தென் திருப்பேரை,கடையனோடை, மூக்குப்பீரி வட்டாரங்களில் தந்திக்கம்பி களே காணப்படவில்லை. இதன் மத்தியில் அப்பாதுரை என்ற டிபுடி சூப்ரண்டும், சிவானந்தம் என்ற இன்ஸ்பெக்டரும் கிராமம் கிராம மாகச் சென்று மிருகங்களை வேட்டை யாடுவதுபோல் மனிதர்களை வேட்டை யாடினார்கள். போலீஸ் குண்டாந்தடிக் குத் தப்பியவர்கள் தாலூகாவில் யாரும் இல்லை என்று கூட சொல்லலாம். வீடு களை இடித்தும், நெல், அரிசி கருப் புக் கட்டியை மணலில் போட்டு மிதித் தும் நாசப்படுத்தினார்கள்.
இந்த அக்கிரமத்தை அடக்க வழி முறைகள் கண்டுபிடிக்க செப்டம்பர் 9ம் தேதி மேலப்புதுக்குடி சுனையில் இரவு 10 மணிக்கு போராட்ட வீரர்கள் கூடி னார்கள். போராட்ட வீரர்களுக்கு, புதுக் குடி கிராம மக்கள் பழமும் பச்சரிசிக் கஞ்சியும், தகையலும் பனை ஓலைப் பட்டையில் கொடுத்தார்கள்.கூட்டம் துவங்கியது.
“வெள்ளை ஆட்சியில் போலீஸ் கொடுமையை தவிர்க்க வேண்டுமானால் நம்மில் பலர் நாம் கூறும் கடமையை முடித்துவிட்டு தற்கொலைக்கும் தயாராக இருக்க வேண்டும். உங்களில் இதற்கு எத்தளைபேர் தயார்” என்று கோசல்ராம் கூட்டத்தைப் பார்த்து கேட்டார்.
கொடிய அடக்கு முறையிலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்த அக்கிரமக் காரர்களைச் சுட்டு வீழ்த்தவும் நாம் தயா ராக வேண்டும். புனிதமான அந்தக் கடமையை நிறைவேற்றிவிட்டு வாஞ்சி நாதனைப்போல் நாமும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு எத்தனை பேர் தயார்? தயார் என்றல் ரத்தக் கையெழுத்திட்டு தர வேண்டும். என்றும் கோசல்ராம் கேட்டார்.
கடையனோடை மகாராஜன், ஆலந் தலைபெஞ்சமின், ஏரல் நடராஜன் செட் டியார், கொட்டங்காடு கி. ஜி. காசி, மெய் யன் பரப்பு த சிவத்திக்கனி, பரமன் குரிச்சி நாகமணிவாதிரி, செட்டியாபத்து வி. அருணாசலம், வாழவல்லான் பச்சைப்பெருமாள், ஆகிய எட்டு பேர் எதற்கும் தயார் என்று ரத்தக் கையெ ழுத்திட்டுக்கொடுத்தனர். தீவிரப் பணி களை நிறைவேற்றும் முயற்சிக்கு உதவ முன்வந்தவர்களில் கர்ணம், திரு.வெள்ளக்கன் நாடார், வள்ளிவிளை வடிவேல் துரைராஜ் ஆகியோர் குறிப் பிடத்தக்கவர்கள்.
கூட்டம் நேராக பூச்சிக்காடு நோக் கிச் சென்றது. கி. மு. சாமி நாடாருக்கு எதிராக சாட்சி சொல்ல நினைத்தவரின் வீட்டை கூட்டம் சூழ்ந்து கொண்டது. ‘சாட்சி சொல்லமாட்டேன்’ என்ற உறுதி மொழியைப் பெற்ற பின் கூட் டம் திரும்பியது.
சாத்தான்குளம் நோக்கி ஒரு படை யும், மெஞ்ஞானபுரம் நோக்கி மற்றொரு படையும் சென்றது. மெஞ்ஞானபுரம் போஸ்ட் ஆபிசைத் தாக்கியதாக த. தங்கவேல் நாடாரை 1 வது எதிரியாக வும் மற்றும் 8 பேர்கள் மீது வழக்கு போடப்பட்டது. வழக்கு முடிவடையும் 20 மாதம் வரையிலும் தங்கவேல் நாடாகும் மற்றவர்களும் சப்ஜெயில் களில் இருந்தனர். 20 மாதம் கழித்து பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. வழக்கு வாபசானவுடன் ஜெயிலில் இருந்து வெளிவந்த தங்கவேல் நாடாரை மீண்டும் கைது செய்து பாதுகாப்புக் கைதியாக தஞ்சாவூருக்கு கொண்டுபோய் விட்டனர்.
செப்டம்பர் 14 இந்த வீரர்கள் பரமன்குரிச்சி பக்கம் போகும்பொழுது, வெள்ளை சப்கலைக்டர் ஒருவர் கார் பஞ்ச ராகி ரோட்டில் நின்றுகொண்டிருக்கிறார் என்று தகவல் வந்தது. போலீஸ் அடக்குமுறைக்கும் அட்டூழியத்துக்கும் உத்திரவு போட்டவனே இந்த கலைக்டர் தான் என்று தெரிந்ததும் எப்படியும் அவனை மடக்கிப் பிடிக்க வேண்டும் என்று வீரர்கள் அந்த சப்கலைக்டர் நிற்குமிடம் தேடி ஓடினார்கள். துர திர்ஷ்டவசமாக அடுத்து வந்த காரில் அந்த வெள்ளையன் ஏறித் தப்பி பிழைத்துவிட்டான்.
வீரர்களுக்கு அன்று உணவளித்த பெருமை சித்தன்விளை திரு பெரிய
நாடாரைச் சாரும்.
தாலுகாவில் நடந்துவரும் போராட் டங்களுக்கு எல்லாம் ஆதர்சமாக விளங்குபவர்.கோசல்ராம் என் பதை அதிகார வர்க்கம் கண்டு கொண்டது. செய்திகள் பறந்தன. போலீஸ் அதிகாரிகள் சுறுசுறுப்பானார்கள்.
கோசல்ராம் கலைக்டர் ஹெச்மாடியால் கைது செய்யப்பட்டார்.
ராஜகோபாலன் தலைமை என்றாலும் போராட்டம் நின்றுவிட
வில்லை தொடர்ந்து நடந்தது. பி எஸ். ராஜகோபாலன் தலைமை தாங்கி னார். உடன்குடி வட்டாரம் கி ஜி காசி, தேவ இரக்கம், பூவலிங்கம், மந்திரம் போன்ற இளைஞர்கள் போராட்டத்தில் மிகுந்த ஆவேசத்துடன் ஈடுபட்டார்கள் மிகக் குறைந்த 16 வயதுள்ள நாராயண னும் பங்கு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 19 சிறு நாடார் குடி யிருப்பை அடுத்த பைப்லைன் பக்கம் இரவு பி. எஸ். ராஜகோபால் தலைமையில் வீரர்கள் கூடினார்கள்.
குலசேகரப்பட்டிணம் உப்பளத்தை தாக்க வேண்டும் அங்குள்ள வெள்ளை அதிகாரியிடமிருக்கும் துப்பாக்கியை கைப்பற்ற வேண்டும் என்று முடிவு செய்து இரவு 3மணிக்கு கிளம்பிச் சென் றார்கள் வெள்ளை அதிகாரி லோன் கூட் டத்தை நோக்கி சுட்டான்
ஆனால் இருதரப்பிலும் குண்டுகள் வீரர்கள் தரப்பிலிருந்த துப்பாக்கியி லிருந்தும் குண்டுகள் வெடித்தன. குறி தவறிவிட்டன. பைனட்டால் லோன் குத்த முயற்சித்த போது அவன் மீது 14 வெட்டுகள் விழுந்தன. விளைவு வெள்ளையன் மடிந்தான். துப்பாக்கி கைப்பற்றப்பட்டது
இந்தப் போராட்டத்தை நடத்தியது யார் என்பதைக்கண்டு பிடிக்க இயலாத அதிகாரிகள் கிராம மக்களை துன்புறுத்தி னார்கள். மாணவர்கள்தான், முகமூடி அணிந்து இத்தனை போராட்டங்களை நடத்தியதாக எண்ணினார்கள். தாலுகா முழுவதும் அதிகாரவர்க்கஅரக்கர்களால் சூறையாடப்பட்டது.
போலீசாருக்கு வேண்டாதவர்கள் எல்லாம் வழக்குகளில் சேர்க்கப் பட்டனர். எரியும் வீட்டில் பீடுங்கியது லாபம் என்ற முறையில் வீடுகளிலுள்ள பணத்தை எல்லாம் கொள்ளையடித் தனர். அத்தோடு நிற்காமல் பல கிராமங்களில் கூட்டுஅபராதம் விதிக்கப் பட்டது.
சுமார் 500 பேர்கள் கைது செய்யப் பட்டு திருச்செந்தூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப் படும்போதும் ஜெயிலிலும் மிருகத்தை விட அவர்கள் கேவலமாக நடத்தப் பட்டனர் சகிக்க முடியாத அளவுக்கு கொடுமைகள் செய்தார்கள்.
இந்நிலையில் பாதுகாப்புக் கைதி யாக கைது செய்யப்பட்ட கோசல் ராம் திருச்செந்தூருக்கு கொண்டுவரப் பட்டார். அநீதிகளையும், அக்கிரமங் களையும் நேரில் கண்டு விட்டால் உணர்ச்சிவசப்படும் சுபாவமுள்ள கோசல்ராம் ஜெயிலில் நடக்கும் கெடு பிடிகளைக்கண்டு வெகுண்டார். உண்ணா விரதம் ஆரம்பித்தார். அதிகாரிகளிடம் கோபாவேசமாக நிலைமைகளை எடுத் துரைத்தார். பலன்! மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார் கொடுமைகள், இம்சைகள் ஓரளவு குறைந்தன.
தூக்கு தண்டனை பல்வேறு சதிவழக்குகள் ஜோடனை செய்யப்பட்டன. விசேஷ நீதிபதிகள்
நியமிக்கப்பட்டனர், குலசை வழக்கில் ராஜகோபாலன், காசிராஜ னுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட் டது. எல்லா வழக்கிலும் அவர்கள் எதிரி களாகச் சேர்க்கப்பட்டனர். மற்றவர்களும் 21 மாதங்கள் இதனால் கொக்கிரகுளம் சப்ஜெயிலில் வைக்கப் பட்டனர். வரை
வினோதமான, ஆனால் வேதனையான தண்டனை. ஜெயில் வார்டர்கள் அரிசி, காய் கறிகளைத் திருடினார்கள். கைதிகளுக்குப் போதுமான அளவு கிடைக்கவில்லை. உடனே கோசல்ராம், ராஜ கோபாலன், காசிராஜன் ஆகிய மூவரும். ஜெயில் சூப்பிரண்டிடம் புகார் செய்தனர். புகாரைக் கேட்டுக் கொண்டு போனவர் உடனே உத்திரவு போட்டார். என்ன உத்திரவு?
புகார்செய்த மூவரின் தலையை யும் மொட்டை அடித்து சாக்கினால் செய்த சட்டையை அணியும்படி செய்து கைகளில் விலங்கு மாட்டி, தனி அறை களில் அடைக்கும்படியும், உப்பில்லாத கேப்பைக் கூழ் கொடுக்கவேண்டு மென்றும் உத்திரவு வந்தது.
ஜெயிலில் இருக்கும் வீரர்களை உற்சாகப் படுத்தும் முறையில் ழி. கி. நயினார் ஆச்சாரியும் திரு எ.ஏஸ். பெஞ்சமினும் தேசிய கீதங்களைப் பாடு வார்கள். கைதிகளின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள்.
மலமும், தண்ணீரும் ஓடும் ஜெயில் அறை இருவர் மட்டுமே இருக்கக்கூடிய அறையில் 12 பேர் வரை அடைக்கப் படுவார்கள். மலஜலம் கழிக்க ஜெயி லுக்குள் ஒரு டின் பீப்பாய் இருக்கும். அதில் ஏறி உட்கார்ந்து மலம் கமிக்க வேண்டும். அந்த நேரத்தில் சிலர் அதற்குள் விழுந்து விடுவார்கள். உடம் பெல்லாம் மலம் மயமாகிவிடும். அறை யிலும் மலமும் தண்ணீரும் ஓடும்.
ஒரு முறை திரு. மங்களா பொன்னம்பலம் பீப்பாய்க்குள் விழுந்து உடம்பெல்லாம் மலத்துடன் ஒரு இரவு பூராவும் நாற்றத்துடன் கழித்தார். எவ்வளவு கேட்டும் கழுவிக்கொள்ள தண்ணீர் தர மறுத்து விட்டார்கள்.
நாங்குநேரி தாலூகா குட்டத்தை சேர்ந்த திரு மகராஜ மார்த்தாண்டம் குலசை குரும்பூர் சதி வழக்குகளில் சேர்க்கப்பட்டு ஜெயிலில் கடுமையான சித்திரவதைக்கு ஆளானார். 21 மாதம் சப் ஜெயில்களில் இருந்தார்.
வாழ்வல்லான் திரு. பச்சைப் பெருமாள் குரும்பூர் சதி வழக்கில் சேர்க்கப்பட்டு 21 மாதம் சப் ஜெயில் களில் இருந்தார்.
போராட்டத்தில் மக்களை சேரவிடாமல் தடுக்க அதிகாரிகள் பலயுக்திகளையும் பய முறுத்தலையும் கையாண்டனர்.
ஒருவரைப் பிடித்து வந்தார்கள். ஆழமான குழி தோண்டப்பட்டது.
அந்த நபரை குழிக்குள் இறக்கினார்கள். தலைமட்டும் வெளியேதெரியும் அளவுக்கு வைத்துவிட்டு கழுத்தளவு மண்ணைப் போட்டு மூடினார்கள். போராட்டத்தில் சேராதே என்று பயமுறுத்தினார்கள். குழியில் இறக்கி மண்மூடப்பட்ட நபர் கடையனோடை மகாராஜன் ஆவார்.
இப்படி நூற்றுக்கணக்கானவர்கள் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானார்கள்.
குலசை வழக்கில் ராஜகோ பாலன், காசிராஜன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை ஜென்ம தண்டனையாக மாற்று மாறு காந்திஜியும் ராஜாஜியும் முயற்சித்து வெற்றியும் கண்டார்கள்.
கொலையுண்ட லோன் துரையின் சகோதரிகளும் ராஜகோபாலன், காசி ராஜனுக்கு கருணை காட்டுமாறு விண்ணப்பம் செய்தார்கள்.
சுதந்திரத்திற்குப்பின் இருவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
குலசேகரப்பட்டிணம் கொலைவழக்கு.
“இந்தியாவின் சுதந்திர வீரன் என்று ஒருவன் இருந்தால், அது, எங்கள் அண்ணன் காசிராஜனைத் தவிர வேறு ஒருவரும் இல்லை ராஜனைக் கட்டித் தழுவிக் கொண்டு -என் று காசி ராஜகோபாலன் கூறினார்” இவ்வாறு குலசேகரப்பட்டிணம் கொலை வழக்கில், சர்க்கார்தரப்பில் சாட்சி கூறிய, குலசேகரபட்டிணம், உப்பளம் போலீஸ் காவலாளி நெல்லை செஷன்ஸ் கோர்ட் விசாரணையில் தமது சாட்சியத்தை துவங்கினார். 19-10-1942ல் குலசேகரபட்டிணம் உப்பளத்தில் நடந்த விடுதலை போராட்டத்தில், எதிர்பாராத விதமாக வடக்கு ஸ்காட்லாண்டைச் சேர்ந்த வெள்ளையரான லோன் என்னும் பேக்டரி ஆபீஸர் கொலையுண்டார்.
இக்கொலை வழக்கானது அவசரக் கால விசேஷ அதிகாரிகளின் கீழ் நெல்லை செஷன்ஸ் நீதிபதியாக இருந்த ஸ்ரீ பாலகிருஷ்ண அய்யரால், பலத்த போலீஸ் காவலுக்கு மத்தியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. அந்த விசாரணையில் சாட்சியம் கூறிய உப்பு இலாகா போலீஸ் காவலர் மேற்கண்டவாறு தமது சாட்சியத்தை ஆரம்பித்து தீப்பற்றி எரிந்த உப்பு இலாகா கட்டிடத்தின் வெளிச்சத்தில் காசிராஜனையும், ராஜகோபாலனையும்,
மற்றும் குற்றவாளிகளையும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது வாக்குமூலம் கூறினார். இருபத்தைந்து எதிரிகள் சார்பில் வாதாட வக்கீல்கள் எவரும் முன்வரவில்லை. இதனைக் கண்ணுற்ற பிரபல காங்கிரஸ் வக்கீல் ஸ்ரீ எஸ். பி. சிவசுப்பிரமணிய நாடாரும், ஸ்ரீ.வி.எஸ், சங்கரசுப்பிர மணிய முதலியாரும் ஒன்றுகூடி வீர தியாகிகளின் விடுதலை போராட்ட வழக்குகளில் ஊதியம் எதுவும் பெறாமல் தம்மைப்போல் இலவசமாக வாதாடு வதற்கான காங்கிரஸ் அபிமானிகளாய் உள்ள வக்கீல்கள் கே.எஸ்.பாலாஜி டி.வி. ராமசேஷய்யர், டி.எம்.சுப்பிர மணியம் அய்யர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை தமக்குள் ஏற்படுத் தினார்கள்.
மதுரை பிரபல குற்ற வழக்கறிஞர் பாரிஸ்டர் ராமானுஜத்தை, பொது மக்கள் கொடுத்த நிதியிலிருந்து பீஸ் கொடுத்து, வழக்கை நடத்திவந்தார்கள் ஆயினும் என்ன! நெல்லை செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பில் தூக்குதண்டனையும் ஜென்ம தண்டனையும் 10 வருடம் சிறைத் தண்டனையும் பலருக்கு விதிக்கப் பட்டது.
தகுந்த வழக்கறிஞர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீலும் பயனளிக்கவில்லை. பின்னர் டில்லியிலுள்ள சமஷ்டி நீதி மன்றத்தில் அப்பீல் செய்யப் பட்டது. போயிற்று. அதுவும் பலனளிக்காமல்
இந்த வழக்கின் விபரம் மகாத்மா காந்திக்கும் எட்டியது. காந்திஜியின் ஆலோசனைப்படி, ராஜாஜி இவ் வழக்கின் அப்பீலை லண்டனிலுள்ள பிரிவு கவுன்சிலில் தாக்கல் செய்வதற் காக லண்டனுக்குப்புறப்பட தயாரானார். ஆனால், இச்சந்தர்ப்பத்தில் 2வது உலக யுத்தம் ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. ராஜாஜி அவர்கள் லண்டனுக்கு வந்ததால், அங்கு என்ன அரசியல் குழப்பங்கள் ஏற்படுமோ என்று பயந்த பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் அப்பிலை இந்தியாவிலேயே விசாரித்து முடிவு செய்வதற்கான ஒரு தனி உத்தரவை பிறப்பித்தார்.அப்பிலும் நடைபெற்றது.
தேச விடுதயைக்காக உயிரையும் பணயமாக வைத்துப் போரசடிய தேச பக்த வீரச்செம்மல்களுக்கும், இந்தியச விலேயே முதன் முதலாக வீரர்களை நாட்டுமக்களுக்கு அறிமுகப் படுத்தும் புனிதப் பணியை மேற்கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு ஸ்தூபி அமைப்புக் கமிட்டிக்கும். குறிப்பாக போராட்டத் தளபதியும், தலைவருமான கேடி கோசல்ரால் அவர்களை சாரும்.
ராஜாஜி இந்தியாவின் வைசிராய் வேவல் பிரபுவுக்கு, காசிராஜன் ராஜகோபால் மீதுள்ள மரணதண்டளையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டி வேண்டுகோள் விடுத்தார். மக்கள் கிளர்ச்சியும் வலுத்தது. வைசிராய், இவ்விரு வீரர்களின் மரண தண்டனை யை ஆயுள் கால தண்டனையாகக் குறைத்தார்.
முடிவாக, நாடு சுதந்திரமடைந்து, சென்னை மாநிலத்தில் சுதந்திர சட்ட சபை ஏற்பட்டு திகழும்போது, 4-4-46ல்,சிறையிலிருந்த தியாகிகள் அனைவருடன் வி. காசிராஜனும், பி. எஸ். ராஜகோபாலனும் விடுதலையாயினர்.