
நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை இயக்கப்படுகிறது
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த மக்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு முன்பதிவில்லாத சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 06014 நெல்லையில் இருந்து அக்.5ம் தேதி மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
மேலும் இந்த சிறப்பு ரயிலானது நெல்லையில் இருந்து 11-உட்காரும் சேர் கார் பெட்டிகள், 4-பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2-பொது இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என மொத்தம் 17 முன்பதிவில்லாத பெட்டிகளுடன் செல்கிறது.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தன், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.