
மத்திய அரசின் வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்கதொகைத் திட்டம் குறித்து தூத்துக்குடி மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அமுதா வேலாயுதம் விளக்கம் அளித்தார்.
மத்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்கதொகைத் திட்டத்தைக் (PMVBRY – பிரதான் மந்திரி விக்சிட் பாரத் ரோஸ்கர் யோஜனா) குறித்து தூத்துக்குடி வருங்கால வைப்பு நிதி அமலாக்கத் துறை அதிகாரி அமுதா வேலாயுதம் தூத்துக்குடி அனல் மின் நிலையம், என்டிபிஎல் & என்எல்சி, தூத்துக்குடி துறைமுகத்தில் அமைந்துள்ள தக்ஷின் பாரத் கேட் வே பிரைவேட் லிமிடெட், எஸ்சிபிசி பவர் பிரைவேட் லிமிடெட், த்ரீ கே பில்டர்ஸ், த்ரீ கே கன்ஸ்டிரக்சன் மற்றும் ஶ்ரீ சக்தி பில்டர்ஸ் & கன்ஸ்ட்ரக்சன் போன்ற நிறுவனங்களுக்கு சென்று இந்த திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, 3.5 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை ரூபாய் 99,446 கோடி செலவீனத்துடன் 2 ஆண்டுகளில் அதாவது 01.08.2025 முதல் 31.07.2027 உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பகுதி – அ : முதல் முறை பணியில் சேரும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக் குறித்தும் மேலும், பகுதி – ஆ: முதலாளிகள் அல்லது உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்தும், யு ஏ என் ரெஜிஸ்ட்ரேரேசன் குறித்தும், பகுதி ஆ ரெஜிஸ்ட்ரேரேசன் குறித்தும் தெளிவாக விளக்கம் அளித்ததோடு மட்டுமல்லாமல் உடனடியாக ரெஜிஸ்ட்ரேரேசன் செய்ய வைத்தார்.