திருச்செந்தூர் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் தவறவிட்ட செல்போன்கள் மற்றும் உடைமைகளை காவல்துறையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் உத்தரவின் படி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் கூடுதலாக குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருவிழாவில் கூட்ட நெரிசலில் காணாமல் போன பக்தர்களின் 25 குழந்தைகள் மற்றும் 9 முதியவர்கள் மீட்கப்பட்டும், பக்தர்கள் தவறவிட்ட 8 பைகள், 12 செல்போன்கள், ஒரு தங்க மோதிரம், 3 ரேசன் அட்டைகள், 4 வெள்ளி கொலுசுகள் மற்றும் பணம் ருபாய் 5400 ஆகியவற்றை கண்டெடுத்தும் காவல் கட்டுப்பாட்டு அறை ஒலிபெருக்கியின் மூலம் காவல்துறையினர்தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் முதியோரின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு பத்திரமாக ஒப்படைத்தனர்.
மேலும் மேற்படி உடைமைகளை தவறவிட்ட பக்தர்களை கண்டறிந்து அவர்களிடம் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி குழந்தைகள், முதியோர்கள், உடைமைகளை பத்திரமாக மீட்டு ஒப்படைத்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.


