தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்து ஊருக்கு புகுவதற்கு காரணம் ஆற்றில் அதிகமாக வளர்ந்து நிற்கும் முள்செடி புதர்களே. எனவே இந்த முள்செடி புதரை அகற்ற தமிழக அரசுவுக்கு பல கோரிக்கை எழுந்து வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வெள்ளப்பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக அகரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் சுற்றுப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆற்று கரைகள் உடைந்து விட்டது. இதை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமிபதி முன்னிலை வகித்தார். எக்ஸ்னாரோ நி-றுவனத்தின் வாடகை இல்லா இயந்திரம் மூலம் , தனியார் மற்றும் அரசு உதவியுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்தது. மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்கள் ஆலோசனை படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியது.
கடந்த (2.02.2025) ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியில் இருந்து ஆற்றுக்கரைக்குள் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மேற்பார்வையில் துவங்கியது. கடந்த எட்டு மாதங்களாக ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை. மறு கரை வழியாக ஆழ்வார் தோப்பில் இருந்து ஆழ்வார்திருநகரி வரை சுமார் 12 கிலோ மீட்டரில் முள்செடிகள் அகற்றப்பட்டுள்ளது. அதிகமான முள்செடிகள் யாரும் உள்ளே புக முடியாமல் அடர்ந்து காணப்பட்ட இந்த இடத்தில் முள்செடிகளை அகற்றி இருப்பது பொதுமக்களால் பாராட்டு பெற்றுள்ளது-
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வரை முன்மாதிரி தாமிரபரணியை உருவாக்க மாவட்ட ஆட்சியரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கடட்மாக மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் மூலமாக தாமிரபரணியின் கரையோரங்களில் ஒருலட்சம் பனை விதைகள் நடும் பணி மற்றும் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சார்பில் 1000 மரக்கன்று நடும் பணி கடந்த மாதம் 6.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் கரையோரங்களில் பனைவிதைகள் நடுதல், ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசுதல், ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முப்பெரும் விழா ஸ்ரீவைகுண்டத்தில் 9.10.2025 அன்று நடந்தது.
விழாவிற்கு, தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்து ஆற்றின் கரையோரங்களில் பனைவிதைகள்&மரக்கன்றுகள் நட்டு வைத்து, ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மூன்றாம் கட்ட பணிகள் தொடக்க விழா ஸ்ரீவைகுண் டம் அணைப்பகுதி யில் நடைபெற்றது. விழாவிற்கு, ஒருங்கி ணைப்பாளர் எழுத் தாளர் முத்தாலங்கு றிச்சி காமராசு வரவேற்றார். கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். நதிக்கரை முருகன் கோயில் அறங்காவலர் சந்துரு, வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, நிர்வாகி கந்த சிவசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் பிரபு அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலை¬ தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ஆற்றின் கரைகளை பலப்படுத்திடும் நோக் கத்திலும், கரைகள் மண் அரிப்பினால் சேதமாகிடுவதை தடுத் திடும் வகையிலும் கரையோரங்களில் பனை மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு, மாண வர்கள், பொதுமக்கள் உறுதுணையாக இருக் கவேண்டும் என்றார். வருவாய் ஆய்வாளர் பிரிதா மகாராசி, கிராம நிர்வாக அலுவலர் கள் மணிகண்டன், முத்துக்குமார், ஆறு பாதுகாப்பு மக்கள் இயக்கம் சித்திரைவேல் , சாமிநா தன், முருகன், மருதம் பவுன்டேஷன் வழக் கறிஞர் ரமேஷ், தங்கராஜ், கோபால், செல்வன்துரை, விஜ யகுமார், ஆனந்த செல்வன், ஜெயராம், சுடலைமணி, மகளிர் குழுவினர்கள், பணி யாளர்கள், ஆப்பரேட் டர் துரை, சமூகஆர் வலர்கள், உள்பட ஊர்பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முரு கன் தலைமையில் செய்திருந்தனர்.
தாமிரபரணியின் நான்காம்கட்டபணி பொன்னன் குறிச்சியில் வருகிற 28 ந்தேதி நடைபெறுகிறது. இதற்கு உதவி ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலர் ஐஸ்வர்யா கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு, பனை விதை மற்றும் விதைபந்துகளை விதைக்க உள்ளார்.


