நெ ல்லை மாவட்ட வரலாறு பற்றி பல நூல்களை எழுதிய வர் முத்தாலங்குறிச்சி காமராசு. அவரது, சமீபத்திய புதினமே ‘வெள்ளத்துரை’ எனும் இந்நூல். தூத்துக்குடியில் நடந்த உண் மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்நாவல். மாற்று சாதி பெண் ணுக்கு உதவ முயன்று வாழ் வில் நடக்கும் வித்தியாசமான காதல் பற்றியும் இந்நாவல் பேசுகிறது. வாழ்வில் நடந்த சில பிரச்னைகளால் மும்பைக்குச் செல்கிறார் வெள்ளத்துரை. மீண்டும் ஊருக்கு வர அவர் மகன் முயற்சி செய்கிறான். அந்த முயற்சி வெல்கிறதா? இல்லை மீண்டும் மும்பைக்கே கிளம்புகிறானா? இதைச் சுற் றியே நாவல் நகர்கிறது. தூத்துக் குடியில் நடந்த மறக்க முடியாத சோகமான நினைவுகளை பல அரிய தகவல்களோடு இந்நா வல் தருகிறது. வழக்கமான நடையில் விறுவிறுப்பான கதை யம்சம் கொண்ட இந்நாவல், நல்ல வாசிப்பை தருபவை. அனைவரும் வாசிக்க வேண்டிய நாவலிது.
வெள்ளத்துரை
முத்தாலங்குறிச்சி காமராசு
பக்கம் 150/-
விலை 210/-
பொன் சொர்ணா பதிப்பகம்
8760970002,9442834236


