தூத்துக்குடியில் தனியார் பள்ளிப் பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 12 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடியில் இன்று காலை 9 மணியளவில் திருநெல்வேலிக்கு புறப்பட்ட அரசு பேருந்தை கனிராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார். தட்டபாறை விலக்கு அருகே செல்லும் போது முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து யூ டர்ன் அடித்து திரும்ப முயன்றபோது அரசு பேருந்து அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பள்ளி வாகனத்தில் வந்த 12 குழந்தைகள் லேசான காயம் அடைந்தனர.
அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 2பேர் அனுமதிக்கப்பட்டனர், 10 மாணவர்கள் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே மாணவர்களின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


