தூத்துக்குடி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் மொத்தம் 13,76,624 வாக்காளர் இடம் பெற்றுள்ளனர்.
விளாத்திகுளம் தொகுதியில் 2,03,732 வாக்காளர்களும், தூத்துக்குடி தொகுதியில் 2,48,300 வாக்காளர்களும் உள்ளனர். திருச்செந்தூர் தொகுதியில் 2,30,702 நபர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,12,885 நபர்களும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,40,988 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2,40,017 வாக்காளர்களும் உள்ளனர்.
பெண் வாக்காளர்கள் அதிகம்
ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பாலின வாரியாகப் பார்க்கும்போது, பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விடக் கூடுதலாக உள்ளது. மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 6,78,752 பெண் வாக்காளர்களும், 6,49,224 ஆண் வாக்காளர்களும், 182 இதர பாலினத்தவரும் இடம் பெற்றுள்ளனர்.
1. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 97,273 ஆண்கள், 1,00,660 பெண்கள் 14 இதரர் என மொத்தம் 1,97,947 வாக்காளர்கள் உள்ளனர்.
2. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,15,136 ஆண்கள், 1,21,263 பெண்கள் 62 இதரர் என மொத்தம் 2,36,461 வாக்காளர்கள் உள்ளனர்.
3. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,08,526 ஆண்கள், 1,14,077 பெண்கள், 28 இதரர் என மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ளனர்.
4. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,02,364 ஆண்கள் 1,04,688 பெண்கள், 2 இதரர் என மொத்தம் 2,07,054 வாக்காளர்கள் உள்ளனர்.
5. ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,13,480 ஆண்கள், 1,19,002 பெண்கள், 54இதரர் என மொத்தம் 2,32,536 வாக்காளர்கள் உள்ளனர்.
6. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,12,445 ஆண்கள், 1,19,062 பெண்கள், 22 இதரர் என மொத்தம் 2,31,529 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதிகளின் வாரியாகப் பார்க்கையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 2,36,461 வாக்காளர்களுடன் மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,32,536 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2,31,529 வாக்காளர்களும் உள்ளனர். திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,07,054 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 1,97,947 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் பெண்களின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி தொகுதியில் அதிகபட்சமாக 1,21,263 பெண் வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 54 இதர பாலினத்தவரும் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இதர பாலினத்தவர் எண்ணிக்கை மிகக் குறைவாக 2 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கருத்துக்கள் இருப்பின், அவற்றை வரும் 25-02-2026-க்குள் தெரிவிக்குமாறு பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக வாக்குச்சாவடி மறுவரையறை தொடர்பான திட்டங்கள் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


