தூத்துக்குடி பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுரை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தெப்பகுளத்தில் ஆண்டு தோறும் தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அப்போது தெப்பக்குளத்தின் தென்புறம் வடபுறம் மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது இதனால் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் தெப்ப திருவிழா பணிகள் தொடர்பாக மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்கா மற்றும் கோவில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சிவன் கோவில் அறங்காவலர்கள், சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது மேயர் கூறுகையில் “திருவிழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தர மாநகராட்சி 100 சதவீதம் தயாராக உள்ளது என்று கூறினார்.அதற்கு அறநிலைதுறை அதிகாரிகள் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தெப்ப திருவிழா நடைபெறாது அடுத்தாண்டு நடைபெறும் என்று கூறினர்.
ஆய்வின் போது சிவன் கோவில் அறங்காவலா் குழு முன்னாள் தலைவர் கந்தசாமி, அறங்காவலா் குழு உறுப்பினா் ஆறுமுகம், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அஸ்வினி, உதவி செயற்பொறியாளர் முத்துராமன், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி மேயாின்நோ்முக உதவியாளா் ரமேஷ், அறநிலையைச்சோந்த பாா்தவன், சுப்பையா, மற்றும் சீலன்ஸ்ருதி உள்பட பலா் உடனிருந்தனா்


